ADDED : ஏப் 10, 2024 02:07 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : அளவுக்கு அதிகமாக குடித்த வாலிபர் இறந்தார்.
திண்டிவனத்தை சேர்ந்தவர் முருகன்,27; இவர் மரக்காணத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இவர் நேற்று காலை 11:30 மணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த விமல் என்பவருடன் சேதாரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் இருவரும் மது அருந்தினர். இதில் திடீரென முருகனுக்கு வலிப்பு ஏற்பட்டது. உடன் விமல் பொதுமக்கள் உதவியுடன் கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர், முருகன் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
