/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியை கட்டி மிரட்டிய வாலிபர் கைது
/
கத்தியை கட்டி மிரட்டிய வாலிபர் கைது
ADDED : செப் 04, 2024 07:51 AM
அரியாங்குப்பம் : பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் சாலையில் வாலிபர் ஒருவர் கத்தியை வைத்து கொண்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டி வருவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார், அங்கு சென்று தகராறில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவர் அரியாங்குப்பத்தை சேர்ந்த திலிப், 24; என்பதும், இவர் மீது அரியாங்குப்பம்,போலீஸ் ஸ்டேஷனில் கஞ்சா, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருக்கிறது. அவரை கைது செய்து, அவரிடமிருந்து, கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.