/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது
/
கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது
ADDED : செப் 04, 2024 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஜீவானந்தபுரத்தில் கத்தியுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம் பகுதியில் மர்ம நபர் ஒருவர் நீண்ட அரிவாளுடன் சாலையில் நின்று பொதுமக்களை மிரட்டுவதாக கோரிமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ஜீவானந்தபுரம் மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது தப்பியோட முயன்ற, அதே பகுதி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த புருேஷாத்தமன் மகன் தமிழ்செல்வன், 25; என்பவரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.