/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தறி கெட்டு ஓடிய டிப்பர் லாரி டோல்கேட்டில் மோதி விபத்து
/
தறி கெட்டு ஓடிய டிப்பர் லாரி டோல்கேட்டில் மோதி விபத்து
தறி கெட்டு ஓடிய டிப்பர் லாரி டோல்கேட்டில் மோதி விபத்து
தறி கெட்டு ஓடிய டிப்பர் லாரி டோல்கேட்டில் மோதி விபத்து
ADDED : மே 05, 2024 05:52 AM

வானூர், : புதுச்சேரி அருகே டிரைவர் துாக்க கலக்கத்தால், டிப்பர் லாரி தறிகெட்டு ஓடி, டோல்கேட்டில் மோதி விபத்துக்குள்ளானது.
கடலூரில் இருந்து நேற்று அதிகாலை டிப்பர் லாரி ஒன்று, திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் பகுதியிலுள்ள கல் குவாரிக்கு, கிரஷர் பவுடர் ஏற்ற சென்றது. அதிகாலை 4:30 மணிக்கு, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி டோல்கேட்டில் சென்றபோது, டிரைவரின் துாக்க கலக்கத்தால், டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.
டோல்கேட் மூன்றாவது லைனில் இருந்த தடுப்புக் கட்டைகளில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. இதில், டிப்பர் லாரியின் பின்பக்க டயர்கள் அச்சுடன் கழன்றன. விபத்தில், டிரைவர் துரைராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த ஆரோவில் போலீசார், டோல்கேட் ஊழியர்கள் உதவியுடன் டிரைவரை மீட்டு, சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிகாலை என்பதால், டிப்பர் லாரி தறிகெட்டு ஓடிய நேரத்தில் டோல்கேட்டில் மூன்று லேன்களிலும் வாகனங்கள் ஏதும் இல்லை. இதனால், பெரிய .அளவில் பாதிப்பு இல்லை. விபத்து குறித்து ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.