தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எதிர்கட்சியினருக்கு அளிக்கும் ஓட்டு குப்பை தொட்டியில் போடுவதற்கு சமம்

எதிர்கட்சியினருக்கு அளிக்கும் ஓட்டு குப்பை தொட்டியில் போடுவதற்கு சமம்

எதிர்கட்சியினருக்கு அளிக்கும் ஓட்டு குப்பை தொட்டியில் போடுவதற்கு சமம்


ADDED : மார் 29, 2024 03:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2024 03:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜி.கே.வாசன் பேச்சு

புதுச்சேரி: எதிர்கட்சியினருக்கு அளிக்கும் ஓட்டு குப்பை தொட்டியில் பொடுவதிற்கு சமம் என தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.

புதுச்சேரி என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து, லாஸ்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது;

புதுச்சேரியில் காமராஜர் எண்ணங்களை பிரதிபலிக்கும் முதல்வராக ரங்கசாமி திகழ்கிறார்.

மாணவர்கள் படிப்படியாக உயர்ந்து, நல்ல நிலையை அடைய வேண்டும் என்பதற்காக , மத்திய அரசுடன் இணைந்து புதுச்சேரி அரசு செயலாற்றி வருகிறது.

கொரோனாவில் இருந்து இந்தியாவை மீட்டவர் பிரதமர் மோடி. கொரோனா காலத்தில் அண்டை நாடுகள் பசி பட்டினியால் தவித்தபோது, இந்தியாவில் பசி பட்டினி கிடையாது.

நாட்டின் பொருளாதாரத்தையும் மிக சிறப்பாக கையாண்டனர். உள்நாட்டிலே கொரோனா தடுப்பூசி தயாரித்து மக்களுக்கு வழங்கினார்.

நமச்சிவாயம் மண்ணின் மைந்தர். காங்., கில் பணியாற்றிய அவருக்கு முறையான அங்கீகாரம் இல்லாததால், பா.ஜ., அவரை அடையாளம் கண்டு அமைச்சராக்கியது.

தற்போது அவரது குரல் பார்லிமெண்டில் ஒலிக்க வேண்டும்.

நமச்சிவாயம் வெற்றி பெற்றால், மத்திய அரசு பிரதமருடன் ஒத்த கருத்துடன் இருப்பார்.

காங்., வெற்றி பெற்றால் மத்திய பா.ஜ.,வுடனும், மாநில என்.ஆர். காங்., கட்சியினருடன் ஒத்த கருத்து இருக்காது.

அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும் இதே நிலை தான். அதனால் உங்கள் ஓட்டுக்களை வீணாக்காதீர்கள்.

எதிர் கட்சிகளுக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டு குப்பை தொட்டியில் போடுவதிற்கு சமம்.

உங்கள் ஓட்டுக்கு உரிமை, மரியாதை உள்ளது.

அதை நிலைநாட்ட, உங்கள் பிரச்னையை தீர்க்கும் நமச்சிவாயத்திற்கு ஓட்டு அளிக்க வேண்டும் என கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us