/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணிடம் ரூ. 2.21 லட்சம் மோசடி
/
பெண்ணிடம் ரூ. 2.21 லட்சம் மோசடி
ADDED : ஏப் 13, 2024 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வேலன்டீன், 34. இவரது வாட்ஸ் ஆப்பில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என செய்தி வந்தது. அதில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு அவர் பேசினார்.
அப்போது பேசிய மர்ம நபர், முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பி, தனது வங்கி கணக்கில் 2.21 லட்சம் ரூபாயை முதலீடு செய்து ஏமாந்தார்.
இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி நபரை தேடி வருகின்றனர்.

