/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஷேர் மார்க்கெட் டிரேடிங்கில் ரூ.7.5 லட்சம் இழந்த வாலிபர்
/
ஷேர் மார்க்கெட் டிரேடிங்கில் ரூ.7.5 லட்சம் இழந்த வாலிபர்
ஷேர் மார்க்கெட் டிரேடிங்கில் ரூ.7.5 லட்சம் இழந்த வாலிபர்
ஷேர் மார்க்கெட் டிரேடிங்கில் ரூ.7.5 லட்சம் இழந்த வாலிபர்
ADDED : பிப் 23, 2025 05:43 AM
புதுச்சேரி,: புதுச்சேரி வாலிபர், ஷேர் மார்க்கெட் டிரேடிங்கில் ரூ.7.5 லட்சம் இழந்துள்ளார்.
புதுச்சேரி, அரவிந்தர் வீதியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மொபைல் எண்ணை மர்மநபர்கள் ஷேர் மார்க்கெட் டிரேடிங் தொடர்பான வாட்ஸ் அப் குழுவில் இணைத்துள்ளனர்.
அதில், ஷேர் மார்க்கெட்டில் டிரேடிங் எப்படி செய்வது மற்றும் அதிக லாபம் வரும் இணையதளங்கள் குறித்து பதிவிடப்பட்டு உள்ளது. அதை நம்பிய முருகானந்தம், மர்மநபர்கள் பதிவிட்ட இணையதள ஷேர் மார்க்கெட் டிரேடிங்கில் ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்து உள்ளார். பின்னர், அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது, இவரது கணக்கு மர்ம நபர்களால் முடக்கப்பட்டிருந்தது. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறுகையில், சமூக வலைதளங்களில் ஆசை வார்த்தை கூறி ஆன்லைன் ஷேர் மார்க்கெட் டிரேடிங்கில் அதிக லாபம் பெறலாம் என்று வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம். மேலும், டிமேட் வங்கி கணக்கு இல்லாமல் டிரேடிங் செய்யும் முறையை பயன்படுத்த கூடாது என எச்சரித்தார்.