/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் கோவிலில் ஆடிப்பூரம்
/
வில்லியனுார் கோவிலில் ஆடிப்பூரம்
ADDED : ஆக 08, 2024 02:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார் : வில்லியனூரில் பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடிப்பூர விழா துவங்கி நடந்து வருகிறது.
முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத்தை முன்னிட்டு, பெருந்தேவி தாயார், தென்கலை வரதராஜ பெருமாள் சுவாமி மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் சுவாமி உள்புறப்பாடு நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி டாக்டர் சந்தானராமன் செய்திருந்தார்.