தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7.5 சவரன் நகை அபேஸ்

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7.5 சவரன் நகை அபேஸ்

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 7.5 சவரன் நகை அபேஸ்


ADDED : ஜூலை 08, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரிக்கு பஸ்சில் வந்த பெண்ணிடம் 7.5 சவரன் நகையை திருடிய ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.

கடலுார் அடுத்த நெல்லிக்குப்பம், கல்கி நகரை சேர்ந்தவர் ேஷக் மொய்தீன் மனைவி பியாரிபேகம்,36; இவர் கடந்த மாதம் 8ம் தேதி இரவு கடலுாரில் இருந்து புதுச்சேரியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு குழந்தைகளுடன் தனியார் பஸ்சில் வந்தார். புதுச்சேரி, இந்திரா சதுக்கம் சிக்னலில் இறங்கி, அங்கிருந்து டெம்போ மூலம் தட்டாஞ்சாவடி ராணி மருத்துவமனை அருகே வந்து இறங்கி, டெம்போவிற்கு பணம் கொடுக்க தனது கைப்பையை பார்த்தபோது, பை திறந்து இருந்தது.

 அதிர்ச்சியடைந்த பியாரிபேகம், கைப்பையை சோதனை செய்தபோது, அதில் தனது தாயின் மருத்துவ செலவிற்காக விற்பனை செய்ய எடுத்து வந்த 7.5 சவரன் நகை திருடு போயிருந்தது.

இதுகுறித்து பியாரிபேகம் நேற்று முன்தினம் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., பதிவுகளை பார்வையிட்டு நகைகளை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து  விசாரித்து வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us