/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
35,000 ரேஷன் கார்டுகள் நீக்கம்? புதுச்சேரி அரசு அதிரடி முடிவு
/
35,000 ரேஷன் கார்டுகள் நீக்கம்? புதுச்சேரி அரசு அதிரடி முடிவு
35,000 ரேஷன் கார்டுகள் நீக்கம்? புதுச்சேரி அரசு அதிரடி முடிவு
35,000 ரேஷன் கார்டுகள் நீக்கம்? புதுச்சேரி அரசு அதிரடி முடிவு
ADDED : ஜூலை 02, 2024 05:06 AM
புதுச்சேரி: மாநிலத்தில் தகுதியில்லாத சிவப்பு ரேஷன் கார்டுகளை அரசு நீக்க முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 3,51,429 லட்சம் மஞ்சள், சிவப்பு கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. சிவப்பு கார்டு வைத்துள்ளவர்களுக்கு மாநில அரசின் கொள்கை முடிவின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரிசிக்கான மானியத் தொகை நேரடியாக வழங்கப்படுகிறது.
இதற்காக ஆண்டிற்கு 200 கோடி ரூபாய் வரை வங்கி கணக்கில் நேரடி மானியமாக செலுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் பூட்டப்பட்ட சூழ்நிலையில் மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஏதும் வழங்கப்படவில்லை. இருப்பினும் பொங்கல் பரிசு, மழை நிவாரணம், கொரோனா நிவாரணத் தொகை அவ்வப்போது மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் ரேஷன்கார்டு வினியோகிக்கப்பட்ட விஷயத்தில் வறுமை சரியாக கணக்கிடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. வசதிப் படைத்த பலர் ஏழைகள் வைத்திருக்க வேண்டிய சிவப்பு ரேஷன் அட்டைகளை வைத்துள்ளனர். அதே நேரத்தில் ஏழைகள் பலரிடம் மஞ்சள் ரேஷன் அட்டைகள் உள்ளதாக குற்றச்சாட்டு தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறது.
எனவே மாநிலத்தில் தகுதியில்லா சிவப்பு ரேஷன்கார்டுகளை கண்டறிந்து நீக்க அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்திய முதல்வர் ரங்கசாமி, துறை செயலர்களையும் கலந்து ஆலோசித்து அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
அதையடுத்து ரேஷன்கார்டுகளை தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் உள்ள ரேஷன்கார்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகிறது. இதில் தகுதியில்லாத 35 ஆயிரம் ரேஷன் கார்டுகள் வரை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்டியலை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்பட உள்ளது.