/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி போலீசாருக்கு 'ஏசி' ெஹல்மெட் டி.ஜி.பி., அதிரடி நடவடிக்கை
/
புதுச்சேரி போலீசாருக்கு 'ஏசி' ெஹல்மெட் டி.ஜி.பி., அதிரடி நடவடிக்கை
புதுச்சேரி போலீசாருக்கு 'ஏசி' ெஹல்மெட் டி.ஜி.பி., அதிரடி நடவடிக்கை
புதுச்சேரி போலீசாருக்கு 'ஏசி' ெஹல்மெட் டி.ஜி.பி., அதிரடி நடவடிக்கை
ADDED : மே 05, 2024 04:24 AM
புதுச்சேரி போலீசார் விரைவில் 'ஏசி' ெஹல்மெட் அணிந்து பணியாற்ற உள்ளனர். இதற்கான பணிகளை துவக்க டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதை கடைபிடிப்பதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஹெல்மெட் அணியாதோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு முன்மாதிரியாக போலீஸ் துறையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளும், போலீசாரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
இருந்தபோதும், கோடைக்காலத்தில் வெயில் சுட்டெரிப்பதால் ஹெல்மெட் அணிவதை போலீசார் சற்று சிரமமாகவே பார்க்கின்றனர். இதனால், போலீசாருக்கு 'ஏசி' ெஹல்மெட் வழங்கலாமா என டி.ஜி.பி., பரிசீலனை செய்து வருகிறார்.
குறிப்பாக, அகமதாபாத் போக்குவரத்து போலீசார் பயன்படுத்துவது போன்ற 'ஏசி' ஹெல்மெட்டை புதுச்சேரி போலீசாருக்கு கொடுக்கலாம்.
இதை, சி.எஸ்.ஆர்., திட்டத்தின் அந்தந்த எஸ்.பி.,கள் வாங்கி தரலாம், இதுதொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
மொத்தம் அரை கிலோ அளவிற்கு எடை கொண்ட 'ஏசி' ஹெல்மெட்டின் உள்ளே சிறிய மின்விசிறி இருக்கும். அதற்கான பேட்டரியை தனியாக போலீசார் இடுப்பில் அணிந்து கொள்ள வேண்டும். பேட்டரியும், ஹெல்மெட்டில் உள்ள மின்விசிறியும் ஒயர் மூலம் இணைக்கப்பட்டு இருக்கும்.
வெயிலில் இந்த ஹெல்மெட்டை அணிந்து பணியாற்றும்போது, பேட்டரியால் இயங்கும் மின்விசிறி மூலமாக குளிர்காற்று கிடைக்கும். இதனால், தலையில் வியர்ப்பதும், உடல் உஷ்ணமாவதும் தடுக்கப்படும்.
இந்த ஹெல்மெட் பேட்டரியை ஒருமுறை முழுவதும் சார்ஜ் செய்தால், 8 மணி நேரம் வரை பயன்பாட்டில் இருக்கும். எனவே தினசரி வெயிலில் பணி செய்யும் போக்குவரத்து போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார் உள்ளிட்டோருக்கு ஹெல்மெட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.