/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிட் குடித்த முதியவருக்கு சிகிச்சை அளித்து சாதனை
/
ஆசிட் குடித்த முதியவருக்கு சிகிச்சை அளித்து சாதனை
ADDED : ஜூலை 29, 2024 05:46 AM

புதுச்சேரி, : ஆசிட் குடித்த முதியவரை பிம்ஸ் மருத்துவமனையில் எண்டொ ஸ்கோப்பி மூலம் சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.
புதுச்சேரியை சேர்ந்த 86 வயது முதியவர் தவறுதலாக கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை குடித்தார். இதனால் அந்த முதியவருக்கு தொடர்ந்து வாந்தி மயக்கம் மற்றும் உணவு அருந்த முடியாத நிலையில் பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர் ரவீந்திர பாரதி மற்றும் குழுவினர் 72 மணி நேரத்திற்குள் மயக்க மருந்து இல்லாமல் எண்டோஸ்கோப்பி மூலம் சிகிச்சை மேற்கொண்டனர். அப்போது அவர் வயிற்றில் புண், ரத்தக்கசிவு, இறந்த தசை இருப்பதை உறுதி செய்து உடனடியாக அதற்குரிய மருந்து தரப்பட்டது.
மூக்கு வழியாக குழாய் மூலம் இரைப்பைக்கு செலுத்தப்பட்டு மருந்து உள்ளிட்ட திரவ உணவு வழங்கப்படுகிறது. தற்போது முதியவர் உடல் நலம் தேறி வருகிறார்.
வெற்றிகரமாக சிகிச்சை அளித்த மருத்துவர் ரவீந்திரபாரதியை, கல்லுாரி முதல்வர் ரேணு பாராட்டினார்.