/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மவுண்ட் பார்க் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
/
மவுண்ட் பார்க் பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
ADDED : மே 07, 2024 03:49 AM
தியாகதுருகம், : தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தியாகதுருகம் மவுண்ட பார்க் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 387 பேரில் 386 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவி சினேகா 579 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். இவர், பாடவாரியாக தமிழ் 97, ஆங்கிலம் 90, இயற்பியல் 98, வேதியியல் 98, உயிரியல் 96, கணிதத்தில் 100 எடுத்துள்ளார்.
மாணவிகள் ஸ்ரீ கலா, வைஷ்ணவி ஆகியோர் தலா 578 மதிப்பெண்ணும், பபிதா ஸ்ரீ 577 மதிப்பெண்ணும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அதேபோல் இயற்பியலில் 5 பேர், கணிதத்தில் 7 பேர், கம்ப்யூட்டர் சயின்ஸ் 9 பேர் என மொத்தம் 21 பேர் 100க்கு100 சாதனை படைத்துள்ளனர்.
மேலும் 570க்கு மேல் 9 பேர், 560க்கு மேல் 17 பேர், 550க்கு மேல் 34 பேர், 500க்கு மேல் 123 பேர், 450க்கு மேல் 233 பேர், 400க்கு மேல் 307 பேர், 300க்கு மேல் 382 பேர் மதிப்பெண் எடுத்துள்ளனர்.
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவர்களையும், வெற்றிக்கு உழைத்த ஆசிரியர்களையும் தாளாளர் மணிமாறன் பாராட்டினார். முதல்வர் கலைச்செல்வி, துணை முதல்வர் முத்துக்குமரன் உடனிருந்தனர்.