/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஹூக்கான் முறையில் மீன் பிடித்தால் நடவடிக்கை; மீன்வளத்துறை எச்சரிக்கை
/
ஹூக்கான் முறையில் மீன் பிடித்தால் நடவடிக்கை; மீன்வளத்துறை எச்சரிக்கை
ஹூக்கான் முறையில் மீன் பிடித்தால் நடவடிக்கை; மீன்வளத்துறை எச்சரிக்கை
ஹூக்கான் முறையில் மீன் பிடித்தால் நடவடிக்கை; மீன்வளத்துறை எச்சரிக்கை
ADDED : மே 01, 2024 01:14 AM
புதுச்சேரி : மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தும் ஹூக்கான் முறையில் மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மீனவர்கள், கடலில் பிளாஸ்டிக் பொருட்கள், மணல் மூட்டை கட்டி சவுக்கு போன்ற மரங்களின் கிளையை கொண்டு (ஹூக்கான் முறை) மீன் பிடித்து வருகின்றனர். இதனால் பாரம்பரிய மீன் பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் வலைகள், சேதமடைந்து வருகிறது.
இதுகுறித்து, புதுச்சேரி மீன்வளத்துறை, கடலுார், விழுப்புரம், மாவட்ட மீன்வளத்துறையை தொடர்பு கொண்டு ஹூக்கான் முறையில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
புதுச்சேரியில் கிராம மீனவர்கள் ஹூக்கான் முறையில் மீன் பிடிப்பது தெரியவந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் மற்ற மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
புதுச்சேரி, மீனவர்கள் கடலில் சுற்றுச்சூழல் பாதிக் கும் வகையிலும், பாரம்பரிய மீனவர்களின் வலை உபகரணத்திற்கு கேடு விளைவிக்கும் ஹூக்கான் முறையில் மீன்பிடிக்க வேண்டாம்.
மீறினால், கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மீறுபவர்கள் மீது, மீன்வளத்துறை மூலம் வழங்கப்படும் அனைத்து உதவிகளும் நிறுத்தப்படும்.
இத்தகவலை, மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தங்கள் கிராமங்களில் ஒலிபெருக்கி, தண்டோரா செய்து மீனவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.