/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை; சீனியர் எஸ்.பி., எச்சரிக்கை

ADDED : செப் 18, 2024 04:18 AM
புதுச்சேரி,: பந்த் போராட்டத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா உத்தரவிட்டார்.
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை ரத்த செய்ய கோரி, இண்டியா கூட்டணி இன்று 18ம் தேதி பந்த் போராட்டம் அறிவித்துள்ளது. பந்த் போராட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா தலைமையில், எஸ்.பி.,க்கள் பக்தவச்சலம், வீரவல்லவன், லட்சுமி சவுஜன்யா, வசம்சிதரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சீனியர் எஸ்.பி., நாராசைதன்யா பேசுகையில், 'பந்த் போராட்டத்தின்போது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ், ஆட்டோ, டெம்போ போக்குவரத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்களுக்காக இயக்கப்படும் அரசு சிறப்பு பஸ்களுக்கு எவ்வித தடையும் ஏற்பட கூடாது. ஸ்பெஷல் பிராஞ்ச் அறிக்கையை பெற்று அந்தந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, தெரிவித்தார்.