/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை தேவை
/
மருத்துவ கழிவுகளை அகற்ற நடவடிக்கை தேவை
ADDED : ஜூன் 28, 2024 06:12 AM

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ கழிவு பொருட்கள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
அரியாங்குப்பத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஏராளமானோர் தினசரரி சிகிச்சை பெறுகின்றனர். சுகாதார நிலையத்தில் காலாவதியான மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்குவதாக புகார்கள் எழுந்தன. அதையடுத்து, ஏற்கனவே இருந்த கவர்னர் தமிழிசை சுகாதார நிலையத்திற்கு சென்று மருந்தகத்தில் இருந்த மருந்து, மாத்திரைகளை ஆய்வு செய்தார்.
இந்நிலையில், நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட மருந்து காலி பாட்டில்கள், மருத்துவ கழிவுகளை மருத்துவமனையில் உள்ளே ஒரு அறையில் போடப்பட்டுள்ளது. பல மாதங்களாக கிடக்கும் மருத்துவ கழிவுகளை அகற்றாமல் இருப்பதால், அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக நோயாளிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
எனவே, சுகாதார நிலையத்தில், சுகாதாரமற்ற நிலையில் கிடக்கும் மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.