/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நடிகர் விஜய்சேதுபதி கவர்னருடன் சந்திப்பு
/
நடிகர் விஜய்சேதுபதி கவர்னருடன் சந்திப்பு
ADDED : ஆக 29, 2024 07:07 AM

புதுச்சேரி: புதுச்சேரி வந்த நடிகர் விஜய் சேதுபதி, கவர்னர் கைலாஷ்நாதனை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினார்.
புதுச்சேரி சட்டசபை எதிரில் உள்ள பாரதி பூங்காவில் நேற்று நடந்த விளம்பர படப் பிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்றார்.
படப் பிடிப்பிற்கு இடையே அவர், காலை 10:30 மணிக்கு கவர்னர் மாளிகை சென்று, கவர்னர் கைலாஷ்நாதனை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினார்.
கொசுக் கடியால் அவதி
பாரதி பூங்காவில் அதிகாலையில் படப் பிடிப்பு துவங்கியது. கவர்னர் மாளிகை எதிர்பக்க வாயில் கதவு அருகே படிப்பு நடந்தபோது, பூங்காவில் அதிக அளவில் கொசுக்கள் இருந்தது. கொசுக் கடியால் அவதிப்பட்ட படக் குழுவினர், பாரதி பூங்காவில் கொசு மருந்து அடித்தனர்.

