தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிட பள்ளி தேசிய விண்வெளி தின கண்காட்சி

ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிட பள்ளி தேசிய விண்வெளி தின கண்காட்சி

ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிட பள்ளி தேசிய விண்வெளி தின கண்காட்சி


ADDED : ஆக 07, 2026 07:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 07:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் மற்றும் புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிட பள்ளி இணைந்து ‘தேசிய விண்வெளி தினம் 2026’ கண்காட்சி மற்றும் வினாடி வினா போட்டி நேற்று முன்தினம் துவங்கியது.

பள்ளி நிறுவனர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மத்திய வடிவமைப்பு பிரிவின் குழு இயக்குநர் முரளிதரன் வரவேற்றார். திட்ட இயக்குநர் சீனிவாசராவ், இஸ்ரோவின் எதிர்கால விண்வெளி திட்டங்கள் குறித்து கூறினார்.

இயக்குநர் உதயசங்கர் சிறப்புரையாற்றினார். மேம்பட்ட தொழில்நுட்ப குழு அமர்வுகளில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் சுற்றுப்பாதை இயக்கவியல், ஏவுவாகன மேம்பாடு, செயற்கைக்கோள் பயன்பாடுகள், ஆழ் விண்வெளி பயணங்கள் குறித்து, மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.

விண்வெளி கண்காட்சி, தொழில்நுட்ப போட்டிகள் மண்டல அளவிலான விண்வெளி வினாடி வினா போட்டி நடந்தது. 32 பள்ளிகளை சேர்ந்த 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சிறந்த அணிகள் பங்கேற்றன. இஸ்ரோவின் நிலையான கண்காட்சி மற்றும் சக்கரங்களில் விண்வெளி என்ற நடமாடும் விண்வெளி விழிப்புணர்வு வாகனம் பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டது. இதில் துல்லியமான சிறிய அளவிலான ஏவுகல மாதிரிகள், வரைபடங்கள், ஏவுதள கட்டமைப்புகளின் விபரங்கள் காட்சிபடுத்தப்பட்டன.

விண்வெளி அறிவியலின் இஸ்ரோவின் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்த நேரடி தொழில்நுட்ப செயல்விளக்கம் நடைபெற்றது. 20 இஸ்ரோ விஞ்ஞானி குழுவினர் நடத்திய பயிற்சி வகுப்பிற்கு பின், மாணவர், தன்னார்வலர்கள் செயல்விளக்கங்களை அளித்தனர்.

நேற்று நடந்த நிறைவு விழாவில், ஆதித்யா பள்ளி முதல்வர் வரவேற்றார். மத்திய வடிவமைப்பு பிரிவின் குழு இயக்குநர் முரளிதரன் ‘தேசிய விண்வெளி தினம்’ நிகழ்வின் முக்கியத்துவம், விண்வெளி, வான்வெளி துறையை நோக்கி அடுத்த தலைமுறையை ஊக்குவிப்பதில் இதன் பங்களிப்பு பற்றி கூறினார். பள்ளிக்கல்வி துறை இணை இயக்குநர் சிவகாமி, ஆதித்யா பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீ வித்யா நாராயணா அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஏற்பாடுகளை, இஸ்ரோ குழுவினரோடு, ஆதித்யா பள்ளி ஆசிரியர்கள், மாணவ குழுவினர் செய்தனர். இஸ்ரோ துணை பொது மேலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us