/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 5 வயது பூர்த்தியானவர்களுக்கு அட்மிஷன்
/
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 5 வயது பூர்த்தியானவர்களுக்கு அட்மிஷன்
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 5 வயது பூர்த்தியானவர்களுக்கு அட்மிஷன்
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 5 வயது பூர்த்தியானவர்களுக்கு அட்மிஷன்
ADDED : ஏப் 24, 2024 11:01 PM
புதுச்சேரி: சி.பி.எஸ்.இ., யில் முதலாம் வகுப்பில் 5 வயது பூர்த்தியான குழந்தைகளுக்கு அட்மிஷன் அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் அரசு பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.இ., பாட திட்டம் கடந்த ஆண்டு அமல்படுத்தப்படுகிறது.
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் கேந்திர வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில் 6 வயது பூர்த்தியானாமல் மட்டுமே ஒன்றாம் வகுப்பு அட்மிஷன் அளிக்கின்றனர்.
இதனால் புதுச்சேரி அரசின் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 1ம் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பு குறித்து தெரியாமல் பெற்றோர் குழம்பினர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்; சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 1ம் வகுப்பு பழைய முறைப்படி 3 வயது முடிந்து எல்.கே.ஜி., யு.கே.ஜி., முடித்து 5 வயதில் சேர்க்கப்படுகின்றனர். 6 வயது முடிந்த குழந்தைகளை தான் 1ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற புதிய ஆணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை.
பழைய முறைப்படி அட்மிஷன் நடக்கிறது. ஏப்ரல் மாதமே 2023-24 கல்வியாண்டு துவங்கி விட்டது.
கடந்த ஆண்டு யு.கே.ஜி படித்த குழந்தைகள் 1ம் வகுப்பில் தற்போது படித்து வருகின்றனர். வரும் ஜூன் மாதம் வரை புதிய அட்மிஷன்களும் நடக்கும் என தெரிவித்தனர்.

