/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை 3ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு
/
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை 3ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை 3ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை 3ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூன் 01, 2024 04:06 AM
புதுச்சேரி : புதுச்சேரி அரசு மற்றும் தனியார் ஐ,டி.ஐ.,களில் சேர்ந்து படிக்க சென்டாக், தொழிலாளர் துறை மூலம் வரும் 3ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புதுச்சேரி தொழிலாளர் துறை பயிற்சி பிரிவு இயக்குனர் செய்திக் குறிப்பு:
புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) ஓராண்டு மற்றும் இரண்டு ஆண்டு என்.சி.வி.டி., மற்றும் எஸ்.டி.வி.டி., பயிற்சி பிரிவுகளில் சேர்ந்து படிக்க ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரும் 3ம் தேதி முதல் வரவேற்கப்படுகிறது.
சேர விரும்பும் மாணவர்கள் https://www.centac puducherry.in அல்லது https://labour.py.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். சென்டாக் இணையதளத்தில் பதிவு செய்ய கட்டணம் தேவையில்லை.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதற்கான தொழிற்பயிற்சி பிரிவுகளிலும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அதற்குரிய தொழிற்பயிற்சி பிரிவுகளிலும் அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்களிலும் விண்ணப்பிக்கலாம்.
உடனடி வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடிய இந்த தொழிற்பயிற்சி பிரிவுகளில் சேருவதற்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் அனைவருக்கும் பயிற்சியின்போது மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும்.
தகுதித்தேர்வு அடிப்படையில் ஒவ்வொரு பயிற்சி பிரிவிலும் ஒருவருக்கு கூடுதலாக 1,000 ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சிரமம் இருப்பின் மாணவ, மாணவிகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று கட்டணமின்றி உதவி மையம் மூலமாக இம்மாதம் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி பற்றிய விபரங்கள் அடங்கிய கையேடுகளை தமிழ், ஆங்கிலம் மொழிகளில் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு 90035 38089ல் தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.