/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்துறையின் அடாவடி செயல் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
/
மின்துறையின் அடாவடி செயல் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
மின்துறையின் அடாவடி செயல் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
மின்துறையின் அடாவடி செயல் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு
ADDED : செப் 04, 2024 07:51 AM
புதுச்சேரி: மறைமுக கட்டணங்களை வசூல் செய்யும் மின் துறையின் அடாவடி செயலை தடுக்க, கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி அரசு, இந்தாண்டு ரூ.200 கோடிக்கு மின் கட்டணத்தை உயர்த்தி விட்டு, ரூ.20 கோடிக்கு மானிய உதவியை அறிவித்துள்ளது மோசடி செயல். மின்துறை என்பது ஒரு வர்த்தக வியாபார நிறுவனம் அல்ல. இந்தியாவில் எந்த மாநிலமும் மின்துறையில் லாபத்தை குறிக்கோளாக கொண்டு செயல்படுவது இல்லை.
புதுச்சேரியில் மட்டும் மின்துறையில் லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் மின்கட்டண உயர்வு, மின் விலையை ஈடுசெய்ய கட்டணம், கூடுதல் வரி, நிரந்தர சேவை கட்டணம், கால தாமத கட்டணம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இந்தாண்டு மின்துறையில் மொத்தம், ரூ.160 கோடி லாபம் கிடைத்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டணத்தை தவிர்த்து நான்கைந்து தலைப்புகளில் மறைமுக கட்டணங்களை வசூல் செய்யும் மின் துறையின் அடாவடி செயலை தடுக்கும் விதமாக கவர்னர், ஒரு சிறப்பு வல்லுநர் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டு, தேவையற்ற கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.