தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கவர்னரிடம் அ.தி.மு.க., மனு

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கவர்னரிடம் அ.தி.மு.க., மனு

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கவர்னரிடம் அ.தி.மு.க., மனு


ADDED : மே 30, 2024 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2024 04:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுச்சேரி அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர், கவர்னர் ராதாகிருஷ்ணனிடம் அளித்த மனு:

ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக, கடந்த 2010ம் ஆண்டு, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டம், கடந்த 2011ம் ஆண்டிலேயே ஜெ., ஆட்சியின்போது தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. ஆனால், 10 ஆண்டுகளாக புதுச்சேரி அரசு அமல்படுத்தாமல் இருக்கிறது.

அதற்கான அரசாணையை இன்றுவரை வெளியிடாமல், மத்திய அரசின் இந்த சட்டத்தை, ஆளும் என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணி அரசு புறக்கணித்து வருகிறது.

ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக, இந்த கல்வியாண்டில், புதுச்சேரி மாநிலத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த, கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், 40 ஆயிரம் ஏழை எளிய மாணவர்கள் ஆண்டுதோறும் பயன் பெறுவர்.

இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவைத்தலைவர் அன்பானந்தம், இணைச் செயலாளர்கள் திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், நகர செயலாளர் அன்பழகன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us