/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமராஜர் நகர் தொகுதியில் அ.தி.மு.க., ஓட்டு சேகரிப்பு
/
காமராஜர் நகர் தொகுதியில் அ.தி.மு.க., ஓட்டு சேகரிப்பு
காமராஜர் நகர் தொகுதியில் அ.தி.மு.க., ஓட்டு சேகரிப்பு
காமராஜர் நகர் தொகுதியில் அ.தி.மு.க., ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 13, 2024 04:42 AM

புதுச்சேரி: அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து, மாநில இணை செயலாளர் கணேசன் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
லோக்சபா தேர்தல் வரும் 19ம் நடக்கிறது. அதையொட்டி, வேட்பாளர்கள் தீவிரமாக ஓட்டு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து, மாநில இணை செயலாளர் கணேசன் நேற்று ஓட்டு சேகரித்தார். காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட சாரம், தென்றல் நகர், ஒத்தவாடை வீதி, சாரம் சிவசுப்ரமணியம் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் ஓட்டு சேகரித்தார்.
ஓட்டு சேகரிப்பின் போது, தொகுதி செயலாளர் ஆறுமுகம், ஜானிபால், தொகுதி பொருளாளர் ராதாகிருஷ்ணன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் தீபிகாவதி, சுகுமார், ரவி, இளவரசி, பணிமலர் உட்பட காமராஜர் நகர் தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஓட்டு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.