ADDED : ஆக 05, 2024 04:26 AM
பாகூர: தனியார் பள்ளி வேன் டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர் அடுத்துள்ள கீழ்பரிக்கில்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணவேல் 32; தனியார் பள்ளியில் வேன் டிரைவாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், கிருஷ்ண வேல் தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அவரது குடும்பத்தினர், தங்கைக்கு திருமணம் முடிந்தவுடன், உனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி உள்ளனர்.
திருமணமாகாத ஏக்கத்தில் இருந்து வந்த கிருஷ்ணவேல் மது பழக்கத்திற்கு ஆளாகி வீட்டில் உள்ளவர்களிடம் சரிவர பேசாமல் இருந்து வந்துள்ளார்.
மன உளைச்சலில் இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் ஸ்கிரீன் துணியால் துாக்குப்போட்டு கொண்ட நிலையில், உடன் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு, பாகூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.