/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் திருப்பணிக்கு அ.தி.மு.க., நன்கொடை
/
கோவில் திருப்பணிக்கு அ.தி.மு.க., நன்கொடை
ADDED : மார் 14, 2025 04:26 AM

புதுச்சேரி: அரியாங்குப்பம் கோவில்கள் திருப்பணிக்காக அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் 2 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.
அரியாங்குப்பம் தொகுதியில் உள்ள வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் உள்ளிட்ட 4 கோவில்கள் திருப்பணிக்காக அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தனது சொந்த செலவில, 2 லட்சம் ரூபாய் நன்கொடையை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
இதில், தொழிலதிபர் சீனிவாசன், தொகுதி செயலாளர் ராஜா, மீனவர் அணி இணை செயலாளர் ராஜவேலு, ஜெ., பேரவை துணைச் செயலாளர் ஜீவா, அவைத் தலைவர் ராஜேந்திரன், வார்டு செயலாளர்கள் பன்னீர், ஜெயக்குமார், பாலு, கோபி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். முன்னதாக, கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து கவுரவிக்கப்பட்டார்.