UPDATED : ஜூன் 27, 2026 11:31 PM
ADDED : ஜூன் 27, 2026 11:23 PM
புதுச்சேரி: சேதராப்பட்டு அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் 23வது பட்டமளிப்பு விழா, கலையரங்கில் நடந்தது.
கல்லுாரி தலைவர் நித்யானந்தன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் சிவசங்கரி முன்னிலை வகித்து, ஆண்டு அறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் குமார் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்ட சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
சென்னை எஸ்.எம்.வித்யாலயா பள்ளி மற்றும் சுபஸ்ரீ கல்வி நிறுவனங்களின் தலைவர், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பேச்சாளர் சுபா சுப்ரமணியன் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான வழிமுறைகள் குறித்து பேசினார்.
விழாவில், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
