UPDATED : மே 10, 2026 09:35 PM
ADDED : மே 10, 2026 08:51 PM
நெட்டப்பாக்கம்: சூரமங்கலம் ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளியளவில் மாணவி மஞ்சுளா 587 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி வினிதா 569 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி தென்னரசி 553 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். 90 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் 6 மாணவர்கள், 85 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் 5 பேர், 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் 18 பேர் பெற்றுள்ளனர். பாடவாரியாக 90 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் தமிழ் பாடத்தில் 25 மாணவர்கள், ஆங்கிலத்தில் 10 மாணவர்கள், வேதியியலில் 6 மாணவர்கள், கம்பியூட்டர் சயின்ஸ் 10 மாணவர்கள், கணிதம் 1, பயலாஜி 8, எக்னாமிஸ் 2, காமர்ஸ் 5, அக்டவுன்சி 4, கம்பியூட்டர் அப்ளிகேஷன் 6 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
பள்ளியளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பள்ளி சேர்மன் மணி, பள்ளி நிர்வாகி விஜயாமணி, ஒருங்கிணைப்பாளர் கவிஸ்ரீ ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்தினர். பள்ளி நிர்வாகி விஜயாமணி கூறுகையில், 'இப்பள்ளி 10 ஆண்டுகளாக 10ம் வகுப்பு பொதுத்தேர்விலும், 6 ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்விலும் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. பள்ளியில் மாணவர்களுக்கு கல்வியுடன், நீட், ஐ.ஐ.டி., ஜே.இ.இ., வகுப்புகளும், என்.ஐ.எப்.டி., மற்றும் என்.ஐ.டி., வகுப்புகள் நடத்தப்படுகிறது. பள்ளியின் வெற்றிக்கு ஒத்துழைப்பு நல்கி வரும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நன்றி' என்றனர்.
