தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விளம்பரச் செய்தி: சுப்ரமணிய பாரதி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

விளம்பரச் செய்தி: சுப்ரமணிய பாரதி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

விளம்பரச் செய்தி: சுப்ரமணிய பாரதி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை


ADDED : மே 10, 2026 08:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 08:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பள்ளி அளவில் மாணவி ரக் ஷனா 600க்கு 584 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்தார். மாணவர் சுபாஷ் 581 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், மாணவி பிரியதர்ஷினி 571 மதிப்பெண்கள் எடுத்து 3வது இடம் பிடித்தார். 

பிளஸ் 2 தேர்வில்  கிராமப்புற பள்ளிகளில் அதிக மாணவர்களை தேர்விற்கு அனுப்பி  100 சதவீத தேர்ச்சியுடன், அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் சாதனை படைத்துள்ளது. பள்ளியில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 17 மாணவர்கள், 500 மதிப்பெண்களுக்கு மேல் 67, 450 மதிப்பெண்களுக்கு மேல் 65, 400 மதிப்பெண்களுக்கு மேல்  44 மாணவர்களும் பெற்றனர்.

கணினி அறிவியல் பாடத்தில் 9 பேரும், கணிதத்தில் ஒருவரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழில் 12 பேரும், ஆங்கிலத்தில் 3 பேரும், உயிரியலில் 2 பேரும், கணினி பயன்பாட்டியல், பொருளாதாரம், வணிக கணிதம் மற்றும் புள்ளியலில் தலா ஒருவர் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் நிர்வாகியும் முதல்வருமான சம்பத், துணை முதல்வர் சுசீலா சம்பத் ஆகியோர் பாராட்டினர்.

பள்ளி நிர்வாகி சம்பத் கூறுகையில், ‘36 ஆண்டுகள் அனுபவமிக்க இப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் தொடர்ந்து மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்தாண்டும் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர். வரும் கல்வி ஆண்டு முதல் எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டம் பின்பற்றப்பட உள்ளது.

எல்.கே.ஜி., முதல் பிளஸ் 1 வரை சேர்க்கை நடந்து வருகிறது. பிளஸ் 1 சேர்க்கையில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us