அ.தி.மு.க., ‘மாஜி’ அமைச்சர் அவதுாறு வழக்கு ஒத்திவைப்பு
அ.தி.மு.க., ‘மாஜி’ அமைச்சர் அவதுாறு வழக்கு ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 10, 2026 05:51 PM
விழுப்புரம்: விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வரும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் மீதான அவதுாறு வழக்குகளின் விசாரணை வரும் ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா, ஆரோவில் பஸ் நிலையத்தில், கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 10ம் தேதியும், அதே ஆண்டு மே மாதம் 1ம் தேதி கோட்டக்குப்பம் நகராட்சி திடலிலும் பொதுக்கூட்டம் நடந்தது.
இக்கூட்டங்களில் பேசிய முன்னாள் அமைச்சர் சண்முகம் தமிழக அரசையும், அப்போதைய முதல்வர் ஸ்டாலினையும் அவதுாறாகவும் பேசியதாக அவர் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த 2 வழக்குகள் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சண்முகம் ஆஜராகவில்லை.
அவரது சார்பில் ஆஜராக வழக்கறிஞர் ராதிகா செந்தில், வழக்குகளை ரத்து செய்யக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், இம்மனுக்கள் மீதான உத்தரவு வரும் வரை, விசாரணையை ஒத்திவைக்கும்படியும் மனுதாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) சுஜாதா, வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
