ADDED : ஜூலை 09, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
: புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி தொழிலாளர் துறை ஆணையர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.சி.சி.டி.யூ., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.சி.சி.டி.யு., சங்க துணைத் தலைவர் விஜயா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ராஜசேகரன், குமரவேலு, பன்னீர்செல்வம், சத்தியராஜ் முன்னிலை வகித்தனர். தேசிய துணைத்தலைவர் பாலசுப்ரமணியன், நிர்வாகிகள் சகாயராஜ், புருேஷாத்தமன் கண்டன உரையாற்றினர்.
மேட்டுப்பாளையம் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி ஒப்பந்த தொழிலாளர் முறையில் ஈடுபடும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
