/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் கல்லுாரி மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்பு
/
எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் கல்லுாரி மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்பு
எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் கல்லுாரி மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்பு
எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் கல்லுாரி மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்பு
ADDED : ஆக 31, 2024 02:27 AM

புதுச்சேரி: எய்ட்ஸ் விழிப்புணர்வு 5 கி.மீ., ஓட்டபந்தயத்தில் ஆண்கள் பிரிவில், தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் முகிலன், பெண்கள் பிரிவில் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவி பிரியதர்ஷினி முதலிடம் பிடித்தனர்.
புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப் பாட்டு சங்க சார்பில் மாவட்ட அளவிலான 5 கி.மீ., எச்.ஐ.வி., விழிப்புணர்வு ஓட்ட பந்தயம் நடந்தது. இந்த ஓட்டப்பந்தயத்தை சுகாதார துறை பொறுப்பு இயக்குனர் செவ்வேள் கொடியசைத்து துவக்கி வைத்தார். கடற்கரை சாலை காந்தி திடலில் துவங்கிய ஓட்டப்பந்தயம், டூப்ளே சிலை, சுப்பையா சாலை, அண்ணா சாலை, அஜந்தா சிக்னல் வழியாக மீண்டும் கடற்கரை சாலை காந்தி திடலில் அடைந்தது.
இறுதியில் ஆண்கள் பிரிவில், தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் முகிலன் முதலிடம், கிேஷார் இரண்டாம் இடம் பிடித்தனர்.
மாவட்ட கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர் தீனதயாளன் மூன்றாமிடம் பிடித்தனர். பெண்கள் பிரிவில், புதுச்சேரி பல்கலைக்கழக மாணவி பிரியதர்ஷினி முதலிடம், ராஜிவ் கலை அறிவியல் கல்லுாரி தமிழரசி இரண்டாமிடம் பிடித்தனர். புதுச்சேரி பல்கலைக் கழக மாணவி பாரதி மூன்றாம் இடம் பிடித்தனர்.
இந்த ஓட்டப்பந்தியத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இதேபோல், காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியத்திலும் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. மாவட்ட அளவிலான ஓட்டப்பந்தயத்தில் வெற்றிப் பெற்றவர்கள் வரும் 11ம் தேதி கடற்கரை சாலையில் நடக்கும் மெகா விழிப்புணர்வு ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க உள்ளனர்.