/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுக்குழு கூட்டம்
/
ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுக்குழு கூட்டம்
ADDED : மார் 29, 2024 04:44 AM

புதுச்சேரி: ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுக்குழு கூட்டம்முதலியார் பேட்டை சுப்பையா இல்லத்தில் நடந்தது.
மாநில தலைவர் தினேஷ் பொன்னையா தலைமை தாங்கினார். கூட்டத்தில்மாநில பொதுச் செயலாளர்சேதுசெல்வம், கவுரவதலைவர் அபிஷேகம், மாநில பொருளாளர் அந்தோணி,மாநிலத் துணைத் தலைவர்கள் சந்திரசேகரன், சேகர், சிவகுருநாதன், மண்ணாதன், மாநிலசெயலாளர்கள்தயாளன், முத்துராமன், மூர்த்தி மற்றும் பொது குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரிப்பது, பா.ஜ., 10 ஆண்டு கால ஆட்சியில் அத்தியாவசி பெருட்கள் விலை ஏற்றத்தால் அனைத்து தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியை பெஸ்டாக மாற்றுவோம் என கூறி தற்போது வொஸ்ட் புதுச்சேரியாக மாற்றியுள்ளனர். இதனால் லோக்சபா தேர்தலில் வைத்திலி ங்கத்தை ஆதரிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

