/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் மே தின கொண்டாட்டம்
/
ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் மே தின கொண்டாட்டம்
ADDED : மே 02, 2024 12:20 AM

புதுச்சேரி, : ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில் தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரியில் ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில், ஆட்டோ, பஸ், லோடு கேரியர், அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்கள் உள்ளிட்ட இடங்களில் மே தின விழாவில் கொடியேற்றி, உணவு, தர்பூசணி, மோர் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் நடந்த விழாவில், ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கி கொடியேற்றினார்.
மாநில துணை தலைவர் முருகன், மாநில செயலாளர் முத்துராமன், பாஸ்கர பாண்டியன், இந்திய கம்யூ., தொகுதி செயலாளர் தென்னரசு, மாநில குழு உறுப்பினர்கள் எழிலன், செல்வம், பொருளாளர் செழியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாநில முழுதும் நடந்த விழாக்களில், இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், ஏ.ஐ.டி.யு.சி., மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, மாநில கவுர தலைவர் அபிேஷகம், பொருளாளர் அந்தோணி, துணை தலைவர்கள் சந்திரசேகரன், சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

