/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.ஜே., சி.பி.எஸ்.இ., பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி
/
ஏ.ஜே., சி.பி.எஸ்.இ., பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி
ஏ.ஜே., சி.பி.எஸ்.இ., பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி
ஏ.ஜே., சி.பி.எஸ்.இ., பள்ளியில் கல்வி விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 16, 2024 05:06 AM

புதுச்சேரி: தவளகுப்பம் அடுத்த டி.என்.பாளையம் ஏ.ஜே., சி.பி.எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த பேரணி யில் பள்ளியில் உள்ள இரட்டையர்களான ஹர்ஷிதா, வர்ணிகா, விவேகா, லீலா, ஸ்ரீ லோகேஸ்வரன், தனுஜயா, தன்ஷிகா, தர்ஷிதா, தில்லை தினேஷ், திலீப் தினேஷ் மற்றும் வினித், வருண் ஆகியோர் முன்னிலையில் மாணவர்கள் பங்கேற்ற கல்வி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணியில், 'மாணவர்களாகிய நாங்கள் படிப்பதற்கு மட்டுமே பள்ளிக்கு வருகிறோம், எங்களுக்கு தேவையான சூழ்நிலைகள் மற்றும் திறமையான கல்வியை கொடுக்க வேண்டும்.
எங்களுக்கும் எங்கள் எதிர்காலத்திற்கும் நீங்கள் உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டும் என்ற 'சே எஸ் டூ எஜு கேஷன்' குறித்து விளக்கம் அளித்து பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
மேலும், போதையில்லா கல்வி, பாலியல் தொல்லை இல்லா கல்வி, சுகமான திடமான ஆரோக்கியமான கல்வியை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளா ளர் மரிய ஜீனா ஜான்சான், மேரி ஜான்சன் மற்றும் முதுநிலை முதல்வர் ரங்கநாதன் செய்திருந்தனர்.