/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.ஜே. சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு
/
ஏ.ஜே. சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு
ஏ.ஜே. சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு
ஏ.ஜே. சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு
ADDED : மார் 26, 2024 05:02 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஏ.ஜே. சி.பி.எஸ்.இ .,மேல்நிலைப் பள்ளியில் 10ம் ஆண்டு மழலையர் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.
சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் மரிய ஜீனா ஜான்சன், தலைவர் மேரி ஜான்சன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
விழாவிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் டாக்டர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். விழாவில், டாக்டர் லோகேஷ் பாலாஜி மற்றும் அவரது துணைவியர் கலந்து கொண்டு, மழலையர் குழந்தைகளுக்கு பட்டம் மற்றும் பரிசுகள் வழங்கினர்.
ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் தீபா சிவரஞ்சனி, சாருலதா ஆகியோர் செய்ருந்தனர். இதில், பெற்றோர்கள் இனி குழந்தைகளுக்கு திடமான சத்தான உணவுகளை மட்டுமே பரிமாறுவோம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.