/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனைத்து வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
அனைத்து வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 22, 2025 04:57 AM

புதுச்சேரி: அகில இந்திய அனைத்து வங்கி ஊழியர்கள் (ஏ.ஐ.பி.இ.ஏ), அலுவலர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு (யு.எப்.பி.யு) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
காந்தி வீதியில் உள்ள இந்தியன் வங்கி கிளை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு யு.எப்.பி.யு. கன்வினர் முரளிதரன் தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி ஊழியர் சங்க செயலாளர் ரீனா வரவேற்றார்.
நிர்வாகிகள் ரவீந்திரன், ஹரி, பேங்க் ஆப் பரோடா ஊழியர் சங்க நிர்வாகி ஆனந்தவேலன் முன்னிலை வகித்தனர். பேங்க் ஆப் இந்திய அகில இந்திய சம்மேளன துணைத் தலைவர் சந்திரசேகரன், எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகி ராஜதுரை ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
யூனியன் வங்கி ஊழியர் சங்க நிர்வாகி பாலா, ஐபோக் செயலாளர் செந்தில்குமார், எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரிகள் சங்க புதுவை பகுதி செயலாளர் ரமேஷ், பேங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் சங்க துணைத் தலைவர் அன்பரசு உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், வங்கிகளில் அனைத்து பிரிவு ஊழியர்கள், அலுவலர்கள் பணி நியமனம் மற்றும் அனைத்து தற்காலிக பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டன.
ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க நிர்வாகி நித்தீஷ் நன்றி கூறினார்.