அகில இந்திய வங்கி, வங்கி சாரா வாடிக்கையாளர் நலச் சங்கம் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய வங்கி, வங்கி சாரா வாடிக்கையாளர் நலச் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 06, 2026 08:41 PM

புதுச்சேரி: அகில இந்திய வங்கி மற்றும் வங்கி சாரா வாடிக்கையாளர் நலன் மற்றும் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில், இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவை மதிக்காமல் செயல்படும் இந்தியன் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ஃபாசி சட்டத்தை வங்கி அதிகாரிகள் சட்ட விரோதமாக பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் சொத்துக்களை ஏலம் விட்டு கொள்ளை அடிப்பதை கண்டித்தும், சிறு, குறு தொழில்களை நசுக்கும் வங்கி நிர்வாகத்தை கண்டித்தும், புதுச்சேரி இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கினார். தி.மு.க., மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளர் டாக்டர் நித்திஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் இளம்பரிதி, தொகுதி செயலாளர்கள் நடராஜன், வடிவேல், தியாகராஜன், மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் மதிமாறன், நெசவாளர் அணி அமைப்பாளர் செந்தில்குமரன், மாநில துணை அமைப்பாளர்கள் சிவதாஸ், சிவா, உருளையன்பேட்டை தொகுதி பொருளாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
