sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொதுப்பணித்துறைக்கு ரூ.743.89 கோடி ஒதுக்கீடு

/

பொதுப்பணித்துறைக்கு ரூ.743.89 கோடி ஒதுக்கீடு

பொதுப்பணித்துறைக்கு ரூ.743.89 கோடி ஒதுக்கீடு

பொதுப்பணித்துறைக்கு ரூ.743.89 கோடி ஒதுக்கீடு


ADDED : ஆக 02, 2024 11:40 PM

Google News

ADDED : ஆக 02, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி நகர பகுதியில் நிலவும் குடிநீர் தரப்பிரச்னையை தீர்க்க வானுார் மணற்கல்லில் இருந்து நல்ல தரமான நீரை எடுக்க 300 மீட்டருக்கு அதிகமான ஆழத்திற்கு ரூ. 12 கோடி மதிப்பிட்டில் 40 ஆழ்துளை கிணறுகள் பல்வேறு பகுதியில் அமைக்கப்படும்.

ஏ.எப்.டி., நிதி உதவியுடன் ஊசுடு ஏரியின் நீரை சுத்திகரிப்பு செய்யும் ஆலை மற்றும் வில்லியனுார் மற்றும் காலாப்பட்டு பகுதியில் குடிநீர் வழங்கல் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ. 11.50 கோடி மதிப்பில் பல்வேறு குடிநீர் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

கனகன் ஏரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் துர்நாற்றம் கட்டுப்படுத்தும் இயந்திரங்கள் நிறுவப்படும். திப்ராயப்பேட்டையில் ரூ. 39.50 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அம்ரூத் மற்றும் மாநில நிதியில் கட்டப்பட்டு வருகிறது.

சங்கராபரணி ஆற்றில் 3 எம்.எல்.டி., கொள்ளவு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ. 36.70 கோடி மதிப்பில் அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஏனாமில் ரூ. 28 கோடி, மாகியில் ரூ. 4.8 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ளது.

ஆசிய வங்கி நிதி உதவியுடன் 4 பிராந்தியங்களிலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ. 4,125 கோடி மதிப்பில் உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கி உதவியுடன் பிள்ளைச்சாவடி முதல் கணபதிசெட்டிக்குளம் வரை கடல் அரிப்பை தடுக்க ரூ. 22 கோடி மதிப்பில் அவசர தடுப்பு சுவர் அமைக்கப்படும்.

செல்லிப்பட்டு பிள்ளையார்குப்பம் கிராமத்தை இணைக்கும் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ. 20.40 கோடி மதிப்பில் தற்போதுள்ள தடுப்பணைக்கு பதிலாக புதிய தடுப்பணை கட்ட டெண்டர் மீண்டும் கோரப்படும்.

மறைமலையடிகள் சாலை, காமராஜர் சாலையை இணைக்க உப்பனாறு வாய்க்காலில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் கட்டுமானத்தின் மீதமுள்ள பணிகள் ரூ. 29 கோடி மதிப்பில் நடப்பு ஆண்டு மாநில நிதியில் கட்டி முடிக்கப்படும்.

ராஜிவ் மற்றும் இந்திரா சிக்னல்களை இணைக்கும் ரூ. 500 கோடி மதிப்பிலான மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை நெடுஞ்சாலை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதுச்சேரி, காரைக்காலில் ரூ. 60 கோடி மதிப்பில் 92 கி.மீ., சாலைகள் அமைக்கப்பட உள்ளது. சிட்பி, நபார்டு உதவியுடன் 4 பிராந்தியத்திலும் சேதமடைந்த சாலைகள் மற்றும் பக்கவாட்டு வடிகால் வாய்க்கால் ரூ. 120 கோடி மதிப்பில் சீரமைக்கப்படும்.

கவர்னரின் தற்காலிக அலுவலகம், குடியிருப்பிற்காக பழைய சாராய ஆலை வளாகம் ரூ. 13.40 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும். ராஜ்நிவாஸ் கட்டடம் ரூ. 14 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்படும். இந்த நிதியாண்டிற்கு ரூ. 743.89 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us