/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.டெக்., நர்சிங் படிப்புகளுக்கு 2ம் கட்ட கலந்தாய்வு சீட் ஒதுக்கீடு
/
பி.டெக்., நர்சிங் படிப்புகளுக்கு 2ம் கட்ட கலந்தாய்வு சீட் ஒதுக்கீடு
பி.டெக்., நர்சிங் படிப்புகளுக்கு 2ம் கட்ட கலந்தாய்வு சீட் ஒதுக்கீடு
பி.டெக்., நர்சிங் படிப்புகளுக்கு 2ம் கட்ட கலந்தாய்வு சீட் ஒதுக்கீடு
ADDED : செப் 04, 2024 07:42 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் பி.எஸ்சி., நர்சிங், பி.டெக்., கலை அறிவியல் உள்ளிட்ட நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு 2ம் கட்ட கலந்தாய்வு சீட் ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகள் மற்றும் கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு நேற்று முன்தினம் 2வது சுற்று வரைவு சீட் ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் தெரிவித்த ஆட்சேபனைகள் அடிப்படையில் குறைகளை தீர்த்து நேற்று முதல் 2வது சுற்று கலந்தாய்வு சீட் ஒதுக்கீடு பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் டாஷ்போர்டில் உள் நுழைந்து தங்களது சீட் ஒதுக்கீட்டின் நிலையை சரிபார்த்து, சீட் ஒதுக்கீடு உத்தரவை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் இன்று 4ம் தேதி காலை 10:00 மணி முதல் அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் சீட் ஒதுக்கீட்டு உத்தரவை சம்பந்தப்பட்ட கல்லுாரி முதல்வரிடம் சமர்ப்பித்து சேரலாம். செப்., 6ம் தேதி மாலை 5:00 மணிக்குள் கல்லுாரியில் சேர கடைசி நாளாகும். கல்வி கட்டணம் குறித்த விவரங்களுக்கு சென்டாக் இணையதளத்தில் உள்ள நீட் அல்லாத தகவல் குறிப்பேட்டை பார்க்கவும்.
மாணவர்கள் தகவல் அறிய எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் சென்டாக் உதவி மையம் 0413--2655570, 2655571 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட குடியிருப்பு, சாதி சான்றிதழ்களை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள் வரும் 6ம் தேதி மதியம் 3:00 மணிக்குள் தங்களது டேஷ்போர்டில் உள்ள குறைதீர்ப்பு லிங்க் மூலம் சமர்ப்பித்த பிறகு சீட் ஒதுக்கீடு உத்தரவு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2வது சுற்று கலந்தாய்வில் புதிய சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு, முதல் சுற்றில் ஒதுக்கப்பட்ட சீட் தானாக ரத்து ஆகிவிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.