தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆல்பா மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் 2ம் இடம் பிடித்து சாதனை

ஆல்பா மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் 2ம் இடம் பிடித்து சாதனை

ஆல்பா மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் 2ம் இடம் பிடித்து சாதனை


ADDED : மே 11, 2024 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2024 04:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி,: புதுச்சேரி உருளையன்பேட்டை மங்கலட்சுமி நகர் ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 106 பேரும் தேர்ச்சி பெற்று, 25ம் ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

மாணவர் மணிகண்டன் 500 க்கு 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2ம் இடத்தையும், பள்ளியில் முதலிடத்தை பிடித்துள்ளார். . மாணவி யாஷினி 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 3ம் இடத்தையும், பள்ளியில் 2ம் இடத்தை பிடித்துள்ளார். மாணவிகள் பிரியதர்ஷினி, கோமால் பரிக் 495 மதிப்பெண் பெற்று பள்ளியில் 3ம் இடத்தை பிடித்துள்ளனர். மாணவி சுவாதி 494, அருண்ராஜ் 493, பரணிதரன் 492, ஜோஷிகா 488, கீதரின்வின்சியா 485 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

அறிவியல்-7; கணிதம்-6; சமூக அறிவியல்-4; ஆங்கிலம் பாடத்தில் ஒரு மாணவர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். பிரஞ்சு பாடத்தில் 10 பேர் 99 மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவர் மணிகண்டன் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

பள்ளியில் 14 .பேர் 475க்கு மேலும், 60 பேர் 450க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மாநில அளவிலும், பள்ளி அளவில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் தனதியாகு வாழ்த்தி பாராட்டினார். மேலும், இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இப்பள்ளியில் 10ம் வகுப்பில் 475க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பிளஸ் 1 வகுப்பில் 100 சதவீதமும், 450 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு 75 சதவீதமும், 425 மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்த மாணவர்களுக்கு 50 சதவீத ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us