/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உயிரிழந்த சிறுமிக்கு மூக்குத்தி அணிவித்து நெகிழ்ந்த பாட்டி
/
உயிரிழந்த சிறுமிக்கு மூக்குத்தி அணிவித்து நெகிழ்ந்த பாட்டி
உயிரிழந்த சிறுமிக்கு மூக்குத்தி அணிவித்து நெகிழ்ந்த பாட்டி
உயிரிழந்த சிறுமிக்கு மூக்குத்தி அணிவித்து நெகிழ்ந்த பாட்டி
ADDED : ஜூன் 13, 2024 12:14 AM
புதுச்சேரி : விஷவாயு தாக்கி உயிரிழந்த சிறுமி உடலுக்கு, அவருக்கு பிடித்தமான மஞ்சள் நிற புத்தாடை, தங்க மூக்குத்தி அணிவித்தது அழகு பார்த்த அவரது பாட்டியின் செயலை கண்டு அப்பகுதி மக்கள் கண் கலங்கினர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் 4வது குறுக்கு தெருவில், பாதாள சாக்கடையில் உருவான விஷ வாயு, வீடுகளின் கழிப்பறை வழியாக வெளியேறிய விபத்தில் 5 பேர் மயங்கி விழுந்தனர். இதில் சிறுமி செல்வராணி, 16; காமாட்சி, 45; செந்தாமரை, 80; உயிரிழந்தனர். பாலக்கிருஷ்ணன், பாக்கியலட்சுமி இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் உடல் பிரேத பரிசோதனை செய்து நேற்று மதியம் புதுநகருக்கு கொண்டுவரப்பட்டது. மாணவி செல்வராணி உடலை பார்த்து அங்கிருந்த உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. சிறுமியின் பாட்டி தனது பேத்திக்கு பிடித்தமான மஞ்சள் நிற ஆடையை அணிவித்தார். அத்துடன், சிறுமி ஆசையாக கேட்ட, தங்கத்தால் ஆன மூக்குத்தியை அணிவித்து அழகு பார்த்தார். இச்செயலை கண்ட உறவினர்களும் பொதுமக்களும் கண் கலங்கி நின்றனர்.