/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கால்பந்து விளையாட வந்த கோவா முதியவர் பலி
/
கால்பந்து விளையாட வந்த கோவா முதியவர் பலி
ADDED : செப் 02, 2024 01:13 AM
புதுச்சேரி, : கோவாவில் இருந்து கால்பந்து விளையாட புதுச்சேரி வந்த முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
கோவா தெற்கு, சந்தோர், கிர்தோலியம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஷ் லாரன்சோ ஆன்டோ, 63. இவர் கோவாவை சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்டவர்களுடன் இணைந்து கால்பந்து விளையாட்டு குழுவை அமைத்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று விளையாடி வந்தார்.
அதன்படி, புதுச்சேரி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடந்து வரும் கால்பந்தாட்டத்தில் பங்கேற்பதற்காக கோவாவில் இருந்து ஜோஷ் லாரன்சோ ஆன்டோ உள்ளிட்ட 14 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை புதுச்சேரி வந்தனர்.
காலை 10:30 மணி அளவில் கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடந்த கால்பந்தாட்ட போட்டியை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது, ஜோஷ் லாரன்சோ ஆன்டோ திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஜிப்மருக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.