/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநிலம் அழிவுப்பாதைக்கு சென்றுள்ளது: காங்., பா.ஜ., கட்சிகள் மீது அன்பழகன் குற்றச்சாட்டு
/
மாநிலம் அழிவுப்பாதைக்கு சென்றுள்ளது: காங்., பா.ஜ., கட்சிகள் மீது அன்பழகன் குற்றச்சாட்டு
மாநிலம் அழிவுப்பாதைக்கு சென்றுள்ளது: காங்., பா.ஜ., கட்சிகள் மீது அன்பழகன் குற்றச்சாட்டு
மாநிலம் அழிவுப்பாதைக்கு சென்றுள்ளது: காங்., பா.ஜ., கட்சிகள் மீது அன்பழகன் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 18, 2024 05:03 AM

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலம் காங்., மற்றும் பா.ஜ., ஆகிய கட்சிகளால், அழிவுப் பாதைக்கு சென்றுள்ளதாக, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டினார்.
அவர், இறுதிக்கட்ட பிரசாரத்தில் பேசியதாவது:
புதுச்சேரி லோக்சபா தேர்தல், பண நாயகத்தை நம்பி நடக்கிறது. காங்., பா.ஜ., ஆகிய இரு கட்சிகளும், பணம் கொடுத்து,  மக்களின் ஓட்டுக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கின்றன.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, கொள்ளையடித்ததில், 500, 300 என, பணம் கொடுத்து, ஓட்டை விலைக்கு வாங்கி விடலாம் என, திட்டமிட்டு ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழல், முறைகேடு செய்து வருகின்றனர். பணத்தை  மட்டும் நம்பியுள்ள அரசியல்வாதிகளுக்கு ஓட்டளிக்காதீர்கள்.
மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் சிறு வர்த்தக வியாபாரக் கடை, துப்புரவு பணி, அரசு சார்பில் ஒப்பந்த பணி செய்பவர்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதை கூட யாரும்  கவனிக்கவில்லை.
புதிய தொழிற்சாலைகள் திறக்கப்படவில்லை. சுகாதாரமான குடிநீர், பொதுக்கழிப்பிட வசதிகள் இல்லை. தெருவெங்கும் ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என சமுதாயமே சீர்கெட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை. கஞ்சா, ஸ்டாம்ப் கஞ்சா, கஞ்சா ஆயில் போன்ற போதை பொருட்களின் விற்பனை கேந்திரமாக புதுச்சேரி மாநிலம் மாற்றப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்தத்தில் கடந்த கால காங்., நிகழ்கால பா.ஜ., ஆகிய இரு கட்சிகளால் புதுச்சேரி மாநிலம் அழிவுப்பாதைக்கு சென்றுள்ளது.
அதனால் மக்களின் நலனுக்காக உழைக்கும் அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

