/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்திரைதாள் தீர்வு தொகையை 100 சதவீதம் திருப்பி அளிக்க விரைவில் அரசாணை தொழில் முனைவோருக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு
/
முத்திரைதாள் தீர்வு தொகையை 100 சதவீதம் திருப்பி அளிக்க விரைவில் அரசாணை தொழில் முனைவோருக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு
முத்திரைதாள் தீர்வு தொகையை 100 சதவீதம் திருப்பி அளிக்க விரைவில் அரசாணை தொழில் முனைவோருக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு
முத்திரைதாள் தீர்வு தொகையை 100 சதவீதம் திருப்பி அளிக்க விரைவில் அரசாணை தொழில் முனைவோருக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு
ADDED : ஆக 03, 2024 04:32 AM
புதுச்சேரி : சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உற்பத்தி துவங்கிய முதல் மூன்று ஆண்டுகளுக்கு உரிமங்கள் பெறுதல் மற்றும் ஆய்வுகளில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் தொழில்கள் மற்றும் வணிக துறை குறித்த முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்;
மத்திய அரசு புதுச்சேரியில் 105 கோடி மதிப்பீட்டில் பிரதமர் ஏக்தா மால் அமைக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் கைவினை பொருட்களை எளிதாக நேரடியாக சந்தைப்படுத்த முடியும்.
மென் பொருள் பூங்காக்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், வாகன உற்பத்திக்கு தேவையான துணை நிறுவனங்களை மேம்படுத்த கவனம் செலுத்தி வருகிறோம். புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதற்காக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உற்பத்தி துவங்கிய முதல் மூன்று ஆண்டுகளுக்கு உரிமங்கள் பெறுவது, ஆய்வுகளில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டம் இயற்றி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
அரசு துறைகளில் கால வரையறையோடு சேவைகளை வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, புதுச்சேரி எளிதான வணிகம் என்ற சட்டத்தை விரைவில் இயற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
புதிய தொழில் துவங்கவும், இயங்கி வரும் தொழில்களை விரிவாக்கம் செய்ய விரும்பு தொழில் முனைவோர்களுக்கு நிலம் மற்றும் கட்டடங்களை வாங்குதல், அடமானம், நில அடமானம், கிடங்குகள் ஆகியவற்றிகான முத்திரைதாள் தீர்வு தொகையை தொழில்முனைவோருக்கு 100 சதவீதம் திருப்பி அளிப்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.
ஸ்டார்ட் அப்களை பலத்தப்படுத்த பிரத்யோக முறை உருவாக்கப்படும். கரசூர் மற்றும் சேதராப்பட்டு கிராமங்களில் பல்துறை தொழிற்பேட்டை நிறுவுவதற்கான வரைபடம் தயாரித்து, அதற்குண்டான வேலைகள் நடந்து வருகிறது.
காலியாக உள்ள அரசு துறை நிறுவனங்களின் நிலங்களை தொழில்மேம்பாடு மற்றும் வியாபார நோக்கத்திற்காக, தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், உலகலாவிய ஆராய்ச்சி மேம்பாட்டிற்கான கைவினை முனையங்கள், நிதி தொழில்நுட்ப முனையங்கள் கொண்டு வந்து, புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
மேம்பட்ட தொழில் நிறுவனங்களில் புதுச்சேரி மக்களை பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தொழில், வணிக துறைக்கு இந்தாண்டு 67.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.