/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்கோவிலுார் சார் பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு

ADDED : செப் 17, 2024 06:25 AM

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 2.64 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருக்கோவிலூரில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக புகார் நிலவியது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., சத்தியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் அருண்ராஜ், சப் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் உள்ளிட்ட குழுவினர் நேற்று மாலை 3:20 மணியளவில், திருக்கோவிலுார் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து, சோதனை நடத்தினர்.
சப் ரிஜிஸ்ட்ரார் வேல்முருகன் மேஜை உட்பட அலுவலகம் முழுதும் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 2.64 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.