தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தில் போதை பொருள்தடுப்பு ஊர்வலம்

வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தில் போதை பொருள்தடுப்பு ஊர்வலம்

வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தில் போதை பொருள்தடுப்பு ஊர்வலம்


ADDED : ஜூன் 29, 2026 10:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 10:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்:   வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் சார்பில் போதை பொருள் தடுப்பு  குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

அரியூர் வெங்கடேஸ்வரா கல்வி குழும மாணவர்கள் சார்பில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் வில்லியனுாரில் உள்ள கம்யூனிட்டி மெடிக்கல் சென்டரில்  இருந்து துவங்கியது. ஊர்வலத்திற்கு ரவிக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.  சிறப்பு விருந்தினராக புதுச்சேரி சட்டம் ஒழுங்கு டி.ஐ.ஜி சத்தியசுந்தரம் கொடியசைத்து  துவக்கி வைத்தார். 

 நிகழ்ச்சியில் மேற்கு பகுதி எஸ்.பி. சுப்புரமணி,  வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர் வித்யா, இயக்குனர் ரத்தினசாமி, பொது மேலாளர் சவுந்தரராஜன், முன்னாள் சேர்மன் பாலமுருகன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். புதுச்சேரியில்  தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பள்ளி மற்றும்  கல்லுாரி மாணவர்கள் சார்பில்  விழிப்புணர்வு ஏற்படும் வகையில்  ஊர்வலம் நடந்தது.  இதில் 500க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று போதை பொருள் விற்பனை மற்றும் தடை சட்டத்தை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியவாறு வில்லியனுார் நான்கு மாட வீதிகள் ஊர்வலமாக சென்றனர். 

 இந்நிகழ்ச்சியில்  வெங்கடேஸ்வரா கல்வி குழும கல்லுாரியை சேர்ந்த முதல்வர்கள், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us