அப்போலோ சிறப்பு நிபுணர் 18ம் தேதி புதுச்சேரிக்கு வருகை
அப்போலோ சிறப்பு நிபுணர் 18ம் தேதி புதுச்சேரிக்கு வருகை
ADDED : ஜூலை 15, 2026 07:31 PM
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனையின் பித்தப்பை மற்றும் குடலிறக்கம் சிறப்பு நிபுணர், 18ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.
புதுச்சேரி எல்லைபிள்ளைச்சாவடி, 100 அடி ரோடு, என்.டி.மகால் எதிரில் அப்போலோ மருத்துவமனை தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு அப்போலோ மருத்துவமனையின் பித்தப்பை மற்றும் குடலிறக்கம் சிறப்பு நிபுணர் டாக்டர் கலையரசன் ராஜா, வரும் 18ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.
இதில் பித்தப்பை கற்கள், குடலிறக்கம், வயிற்றுபோக்கு, நெஞ்சு எரிச்சல், உணவுக்குழாய் தொடர்பான பிரச்னைகள், விழுங்குவதில் சிரமம், கல்லீரல் கட்டிகள், மஞ்சள் காமாலை, பித்தநாள கற்கள், இன்ட்ரா ஹெபாட்டிக், கணைய நோய்கள், கணைய புற்றுநோய், கணைய அழற்சி, நியூரோ என்டோக்ரைன் கட்டிகள், மண்ணீரலில் பிரச்னைகள், குடலியல் புற்றுநோய்கள், பெருங்குடல் மற்றும் சிறுகுடல் நோய்கள், மூலநோய், புண்கள் தொடர்பான பரிசோதனை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மாலை 4.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஆலோசனை வழங்குகிறார். . முன் பதிவிற்கு 0413–4901083, 99446 63139, 8248753248, எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
