/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய படிப்புகளுக்கு விண்ணப்பம்
/
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய படிப்புகளுக்கு விண்ணப்பம்
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய படிப்புகளுக்கு விண்ணப்பம்
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய படிப்புகளுக்கு விண்ணப்பம்
ADDED : மே 31, 2024 02:41 AM
புதுச்சேரி: காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் உள்ள 16 முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
லாஸ்பேட்டையில் உள்ள, தாகூர் கலைக் கல்லுாரி வளாகத்தில் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில், எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., உள்ளிட்ட 16 முதுநிலை பட்டப் படிப்புகள் உள்ளன.
இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் இன்று 31ம் தேதி முதல் ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது. www.kmcpgs.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவம், தகவல் குறிப்பேட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் தகுந்த சான்றிதழ்களை இணைத்து, இயக்குனர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், லாஸ்பேட்டை, புதுச்சேரி-605008 என்ற முகவரியில் விரைவு தபால் அல்லது நேரில் தர வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 14ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
எந்தந்த படிப்புகள்
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் எம்.ஏ., படிப்பில் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, பொருளாதாரம், வரலாறு படிப்பு உள்ளது. எம்.எஸ்சி., படிப்பில், கணிதம், இயற்பியல், வேதியியல் தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல், ேஹாம் சயின்ஸ் படிப்புகள் உள்ளன.
இதுதவிர எம்.காம்., பொது, எம்.காம்.,கார்பரேஷட்ஷிப், எம்.டி.டி.எம்., எனப்படும் சுற்றுலா டிராவல் மேலாண்மை படிப்புகள் உள்ளன.
இவற்றில் எம்.எஸ்சி., ேஹாம் சயின்ஸ், எம்.காம்., கார்பரேஷட்ஷிப் உள்ளிட்ட படிப்புகளில் மாணவிகள் மட்டுமே சேர்க்கப்படுவர். இத்தகவலை காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய இயக்குனர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.