தேசிய பால புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய பால புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : மே 14, 2026 06:53 PM
புதுச்சேரி: வீர தீர செயல்களில் சிறந்து விளங்கும் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதுக்கான, விண்ணப்பங்கள் இணையம் வழியாக (https://awards.gov.in) 01.04.2026 முதல் 31.07.2026 அன்று வரை பெறப்படுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சார்ந்த வீர தீர செயல், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கலை மற்றும் பண்பாடு, ஆகியவற்றில் சிறந்து விளங்கிய 5 வயதுக்கு மேல் 18 வயதுக்குள் உள்ள குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
இவ்விருதுக்கு விண்ணப்பதாரர் தன்னிச்சையாகவோ அல்லது நிறுவனமோ பரிந்துரை செய்யலாம். இவ்விருது குறித்த முழு விவரங்களுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அல்லது மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் https://awards.gov.in மற்றும் https://wcd.py.gov.in என்ற இணைய முகவரிகளை பார்க்கவும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
