தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தென்னை, மரவள்ளி ஊக்கத்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

தென்னை, மரவள்ளி ஊக்கத்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

தென்னை, மரவள்ளி ஊக்கத்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : மே 15, 2026 10:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 10:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: விவசாயிகளிடம் இருந்து தென்னை மற்றும் மரவள்ளி சாகுபடிக்கான ஊக்கத்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தோட்டக்கலை இணை வேளாண் இயக்குநர் சண்முகவேலு விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, கூடுதல் வேளாண் இயக்குநர் (தோட்டக்கலை) அலுவலகம் மூலம் 2026–27ம் ஆண்டிற்கான தென்னை மற்றும் மரவள்ளி சாகுபடிக்கான ஊக்கத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்த வரவேற்கப்படுகிறது.

விவசாயிகள் விண்ணப்பங்களை வரும் 18ம் தேதி முதல் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் உள்ள கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகம் மற்றும் அந்தந்த பகுதி உழவர் உதவியகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், துறையின் www.agri.py.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 30ம் தேதிக்குள் அந்தந்த பகுதியில் உள்ள உழவர் உதவியகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us